அமெரிக்க உயர்நிலை பாடசாலையில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி
அமெரிக்க மிசோரியில் அமைந்துள்ள உயர்நிலை பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில் துப்பாக்கிதாரி உட்பட குறைந்தது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிதாரி நேற்று உள்ளூர் நேரப்படி முற்பகல் 9:00 மணியளவில் பாடசாலைக்குள் பிரவேசித்துள்ளார்.
துப்பாக்கிதாரி- முன்னாள் மாணவர்
பாடசாலைக் கட்டிடத்தின் கதவுகள் பூட்டப்பட்டிருந்த நிலையில், அவர் எப்படி உள்ளே நுழைந்தார் என்பது உடனடியாகத் தெரியவில்லை.
துப்பாக்கிதாரியின் ஆயுதம் இடையில் செயற்படாமை காரணமாகவே உயிர்கள் காப்பாற்றப்பட்டதாக சாட்சிகள் கூறுகின்றனர்.
துப்பாக்கிதாரி 19 வயதுடைய முன்னாள் மாணவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
எனினும் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார்.
தாக்குதலுக்கான காரணம்
சுமார் 400 மாணவர்களைக் கொண்ட இந்த பாடசாலையில் அவர் நடத்திய தாக்குதலுக்கான நோக்கம் தெளிவாக தெரியவரவில்லை.
சம்பவத்தின்போது பெண் ஒருவர் பாடசாலைக்குள் உயிரிழந்துள்ளார். மற்றும் ஒரு பெண் மருத்துவமனையில் மரணமானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த ஏழு பேரில் மூன்று பெண்கள் மற்றும் நான்கு சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர்.
எனினும் அனைவருக்கும் உயிருக்கு ஆபத்தான காயங்கள் இல்லை என்று உள்ளூர்
ஊடகங்கள் தெரிவிக்கின்றன.





ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
