அமெரிக்காவில் ஏற்பட்ட இயன் புயல்: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு
அமெரிக்க மாநிலம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்திய இயன் சூறாவளியைத் தொடர்ந்து புளோரிடாவில் பெரும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மாநிலத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் உறுதிப்படுத்தப்பட்ட எண்ணிக்கை கணிசமாக உயரக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இயன் புயல் புளோரிடாவின் வரலாற்றில் "கணிசமான உயிர் இழப்பு" கொண்ட மிக மோசமான சூறாவளியாக இருக்கும் என்று ஜோ டைபன் எச்சரித்துள்ளார்.
இயன் புயல்
புளோரிடா மாநிலத்தை தாக்கியுள்ள இயன் புயலால் மில்லியன் கணக்கானோருக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருப்பதோடு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடல் அலைகள் சுமார் 3.6 மீற்றருக்கு உயர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை கடந்த பல ஆண்டுகளில் தாக்கிய மிக மோசமான புயலாக மாறியிருக்கும் இயன் புயலால் மணிக்கு 241 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசியுள்ளது.
வானிலை ஆய்வு நிலையம்
இயன் புயல் தற்போது நான்காம் வகை புயலாக தீவிரம் குறைந்துள்ளது. எனினும் மக்களை பாதுகாப்பான
இடங்களுக்குச் செல்லும்படி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இயன் புயலால் பாதிக்கப்பட்டுள்ள நகரங்களில் பெருமளவு சேதம் ஏற்பட்டிருப்பதாக வானிலை ஆய்வு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

திடீரென இப்படியொரு புகைப்படத்தை வெளியிட்ட VJ பிரியங்கா தேஷ்பாண்டே.. யாருக்கு இதை சொல்கிறார் Cineulagam

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
