முல்லைத்தீவு நகர கடற்கரையில் நடைபெற்ற உலக சுற்றுலா தின நிகழ்வு
முல்லைத்தீவு நகர கடற்கரையில் உலக சுற்றுலா தின நிகழ்வு மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.
உலக சுற்றுலா தின நிகழ்வு நேற்றைய தினம் (12) மாலை 4 மணிக்கு முல்லைத்தீவு நகர கடற்கரையில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, வட மாகாண சுற்றுலாப் பணியகம், மாட்ட செயலகம், கரைதுறைப்பற்று பிரதேச செயலகம், கரைதுறைபற்று பிரதேசசபை இணைந்து நடத்திய குறித்த நிகழ்வில் வட மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
கலாசார நிகழ்வுகளின் அணிவகுப்பு
ஆரம்ப நிகழ்வானது கலை கலாசார நிகழ்வுகளின் அணிவகுப்புடன் முல்லைத்தீவு மாவட்ட செயகத்திற்கு முன்பாகத் தொடங்கி முல்லைத்தீவு நகர கடற்கரையினை வந்தடைந்தது.
உள்ளூர் உணவுகளின் காட்சிப்படுத்தல் மற்றும் விற்பனையுடன் இந்த நிகழ்வு நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்தின் சுற்றுலாத்துறையினை மேம்படுத்திடும் நோக்கில் குறித்த நிகழ்வானது முல்லைத்தீவு மாட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வுகள் ஆற்றுகை
முல்லைத்தீவு நகரக் கடற்கரையில் அமைந்திருக்கும் கரைதுறைப்பற்று பிரதேசசபையின் அரங்கில் குறித்த நிகழ்வு இடம்பெற்றதோடு இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் நடனம், மல்லாட்டம், ஒட்டுசுட்டான் பிரதேச கலைஞர்களின் பண்டாரவன்னியன் நாடகம், முஸ்ஸீம் கலாசார கோலாட்டம், முதலான நிகழ்வுகள் ஆற்றுகை செய்யப்பட்டன.
இந்த நிகழ்வில் வட மாகாண சுற்றுலா பணியகத்தின் தலைவர் பத்திநாதன், கௌரவ விருந்தினர்களாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் மற்றும் வட மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஏ.சோதிநாதன், சிறப்பு விருந்தினர்களாக கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.லோகேஸ்வரன், கரைதுறைப்பற்று உதவிப்பிரதேச செயலாளர் சர்மி, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஜீ.ஜெயராணி, உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ரீ.றதீஸ்வரன், ஏனைய உத்தியோகத்தர்கள், பெருந்திரளான மக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.










தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam

இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan
