சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 46 பேர் பலி
மேற்கு சீனாவின் மலைப்பகுதியான சிச்சுவான் மாகாணத்தில் இன்று 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
சிச்சுவான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாவது நிலநடுக்கமானது அடுத்த 40 நிமிடங்களில் யான் நகரில் உணரப்பட்டுள்ளது. அந்த நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
46 பேர் பலி
சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டதையடுத்து 46 பேர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் காணாமல் போயுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலநடுக்கத்தால் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. அத்துடன், 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
போக்குவரத்து பாதிப்பு
நிலச்சரிவால் நெடுஞ்சாலையில் பெரிய கல் உருண்டு விழுந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் நிலநடுக்க மையத்திற்கு அனுப்பப்பட்டனர், எனவும் மீட்புப் பணியாளர்களுக்கு உதவ 1000க்கும் மேற்பட்ட வீரர்கள் அனுப்பப்பட்டுள்ளதாக சிச்சுவான் நில அதிர்வு ஆணையம் தெரிவித்துள்ளது.