'உலக கடற்புல் தினம்' குறித்து அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் வெளியிட்ட தகவல் (Photos)
உலக கடற்புல் தினம் (World Seagrass Day) இம்முறை முதன்முறையாகக் கொண்டாடப்படுகிறது.
இவ்வருடத்திலிருந்து ஆண்டுதோறும் மார்ச் முதலாம் திகதி இத்தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இத்தினத்தைக் கொண்டாடுமாறு 2022,05,23இல் ஐ.நாவில் இலங்கையே பிரேரணை முன்வைத்தது. இப்பிரேரணைக்கு 24 நாடுகள் ஆதரவு வழங்கின. இதையடுத்தே மார்ச் 01இல் உலக கடற்புல் தினம் கொண்டாடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டது. இது இலங்கையர்கள் பெருமைப்படும் விடயமாகும்.
உலகளவில் மூன்று இலட்சம் சதுர கிலோ மீற்றர் கடற்பரப்பளவில் இந்தக் கடற்புற்கள் உள்ளன.159 நாடுகள் மற்றும் ஆறு கண்டங்களை உள்ளடக்கியதாக இந்தக் கடல்சார் சுற்றுச் சூழலுள்ளது.
கடல் வளங்களைப் பாதுகாக்கலாம்
இது புவியின் மிகப் பெறுமதியான இயற்கை வளமாகக் கருதப்படுகிறது. இந்த வளங்கள் வருடாந்தம் ஏழு வீதமளவில் அழிவதாகவும் கணிப்பிடப்பட்டுள்ளது.
இது ஒரு உதைபந்தாட்டப் போட்டியில் முப்பது நிமிடங்களில் அழியும் புற்களுக்குச் சம அளவில் உள்ளது. இதனால்தான் இவ்வாறான கடல்சார் சூழல் தினத்தைக் கொண்டாடுமாறு இலங்கை பிரேரணை முன்வைத்தது.
இவ்வாறு இத்தினத்தைக் கொண்டாடுவதனூடாகக் கடல் வளங்களைப் பாதுகாக்கலாம் என்பது இலங்கையின் நம்பிக்கை. இதற்காக அடுத்த வருடம் (2024) இலங்கையில் இத்தினத்தைக் கொண்டாட கோரிக்கை விடுத்துள்ளோம். இதற்குத் தலைமை தாங்கும் தைரியம் எமக்குள்ளது.
இலங்கையில், இவ்வாறான கடலியல் சுற்றாடல் பிரதேசங்கள் 15 அடையாளங் காணப்பட்டுள்ளன. இவற்றில் மன்னார், யாழ்ப்பாணம், புத்தளம், சிலாபம், மட்டக்களப்பு,திருகோணமலை, வாழைச்சேனை, முல்லைத்தீவு, நீர் கொழும்பு மற்றும் வெலிகமை பிரதேச கடற்புற்கள் அல்லது கடல் வளங்கள் பிரதானமானவை.
கடல்சார் உயிரினங்கள்
எனினும், நாட்டின் கரையோரக் கடல் வளங்கள் சில கடல் அலைகளால் அழிக்கப்படுவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இதனால், இவற்றைப் பாதுகாப்பதில் அரசாங்கம் மிக அவதானம் செலுத்தியுள்ளது.
அந்நியச் செலாவணி வருவாயில் கடல் வளத்தின் பங்கு பிரதானமானது. கப்பல் போக்கு வரத்து, எண்ணெய்க் கசிவு, நவீன மீன் பிடிச் செயற்பாடுகள் உள்ளிட்ட மனித செயற்பாடுகளால், இந்தக் கடற்சுற்றாடல் அழிக்கப்படுகிறது. இதனால், பெறுமதியான கடல்சார் உயிரிகளின் வாழ்வும் சவாலுக்குள்ளாகிறது.
இது, நீர் வேளாண்மை மூலம் நாட்டுக்குக் கிடைக்கும் ஏற்றுமதி வருவாயிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலைமைகள் தொடர்வதை அனுமதிக்க இயலாத ஒரு நிதி நெருக்கடியை நாம் எதிர் கொண்டுள்ளதால் இது குறித்தும் அமைச்சு கவனம் செலுத்தும்.
கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவத் திட்டம் (2018) பிரகாரம் நாட்டின் 37,137 ஹெக்டேயர் கடற்பரப்பில் கடல் வளங்கள் விஸ்தரிக்கப்படவுள்ளன.
இருந்தாலும், வடக்கு, வடகிழக்கு வடமேல் மற்றும் தென்கிழக்கு கடற்பிராந்தியங்களின் தரவுகள் மிகவும் முன்கூட்டிப் பெறப்பட்டும் தௌிவின்றியுமுள்ளன.
எனவே, இது போன்ற குறைபாடுகளைக் களைந்தும் செயற்பாடுகளை விஸ்தரித்தும் கடல்சார் சுற்றாடலைப் பாதுகாப்பதற்குத் தனது அமைச்சு விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
கலந்துரையாடல்
பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர், மியன்மார் தூதுவர்,கியூபா மற்றும் தாய்லாந்து முக்கியஸ்தர்கள் ஆகியோர் சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமடை அமைச்சில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.











அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri
