உலக மக்கள் தொகை மேலும் அதிகரிப்பு! வெளியான கணக்கெடுப்பு
உலக மக்கள் தொகை கடந்த 2021ஆம் ஆண்டில் 7.4 கோடி அதிகரித்துள்ளதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த ஆண்டில் மட்டும் உலக மக்கள்தொகையில் 7.4 கோடி அதிகரித்துள்ளது. இந்தப் புத்தாண்டு தினத்திலிருந்து உலகம் முழுவதும் ஒவ்வொரு 10 நொடிக்கும் 43 குழந்தைகள் பிறக்கும், அதேபோன்று 20 போ் இறப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவின் மக்கள் தொகை 7.07 இலட்சமாக அதிகரித்துள்ளது. இதனால் இன்று நாட்டின் மக்கள் தொகை 33.24 கோடியாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.