இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 10 வீதமானவர்களுக்கு சிறுநீரக நோய் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் பிரதம ஆலோசகர் டொக்டர் சஞ்சய ஹெய்யன்துடுவ இதனை தெரிவித்துள்ளார்.
அதிக எண்ணிக்கையிலான சிறுநீரக நோயாளிகள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.

சிறுநீரக நோயாளிகள் அதிகளவில் பதிவு
நீரிழிவு மற்றும் உயர் குருதியழுத்தம் ஆகியன காரணமாக மேல் மாகாணத்தில் சிறுநீரக நோயாளிகள் அதிகளவில் பதிவாகின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடமத்திய, வடமேல், ஊவா ஆகிய மாகாணங்களிலும் சிறுநீரக நோயாளிகள் அதிகளவில் பதிவாகின்றனர் என தெரிவித்துள்ளார்.

இந்த பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளினால் அதிக எண்ணிக்கையிலானவர்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்படுவதாக தெற்கு ஊடகமொன்று வழங்கிய நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு கொழும்பில் விழிப்புணர்வு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப் News Lankasri
இதுவரை யூத் திரைப்படம் தமிழ்நாட்டிலும், உலகளவிலும் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam