அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறை: ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

United Nations International Women's Day
By Jenitha Nov 22, 2022 11:33 PM GMT
Report

ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் ஒரு பெண் அல்லது சிறுமி நெருங்கிய உறவுகள் அல்லது குடும்ப உறுப்பினரால் கொல்லப்படுவதாகவும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை உலகில் மிகவும் பரவலான மனித உரிமை மீறலாக மாறி வருகிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25 அன்று அனுசரிக்கப்படும் "பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தினை முன்னிட்டே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறை

அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறை: ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | World International Women S Un Chief

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான சர்வதேச தினத்தின் இந்த ஆண்டு கருப்பொருள் “பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒருங்கிணைந்த செயல்பாடு- UNITE: Activism to end Violence against Women and Girls" என்பதாகும்.

கோவிட்-19 மற்றும் உலகப் பொருளாதாரப் பிரச்சினைகள் அதிக உடல் மற்றும் வாய்மொழி துஷ்பிரயோகத்திற்கு வழிவகுத்துள்ளதாக குட்டெரெஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பெண்களுக்கு எதிரான வெறுக்கத்தக்க பேச்சு, பாலியல் துன்புறுத்தல், உருவ துஷ்பிரயோகம் ஆகியவற்றின் மூலம் இணையவழி வன்முறைகளை பெண்கள் எதிர்கொள்வதை சுட்டிக்காட்டினார்.

குட்டெரெஸின் கருத்துக்களை அடிப்படையாக கொண்டு ஐ.நா பெண்கள் மற்றும் ஐ.நா புள்ளியியல் பிரிவு இணைந்து "நிலையான வளர்ச்சி இலக்குகளின் முன்னேற்றம்: பாலின ஸ்னாப்ஷாட் 2022" என்ற தலைப்பில் ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

பாலியல் அல்லது உடல் ரீதியான வன்முறை

அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறை: ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அதிர்ச்சி தகவல் | World International Women S Un Chief

உலகெங்கிலும் உள்ள பிராந்தியங்கள் முழுவதும் வெவ்வேறு இலக்குகளில் முன்னேற்றத்தை இது மதிப்பிடுகிறது மற்றும் வீடுகளுக்குள் வன்முறை தொடர்ந்து பிரச்சினையாக இருப்பதை குறிப்பிடுகிறது.

15 முதல் 49 வயதுக்குட்பட்ட பத்தில் ஒருவர் அவரது நெருக்கமான துணையால் பாலியல் அல்லது உடல் ரீதியான வன்முறைக்கு ஆளாகியுள்ளனர் என்று அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

கோவிட்-19 தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து நான்கில் ஒரு பெண் வீட்டில் அடிக்கடி இதுபோன்று நடப்பதாகக் கூறுகிறார்கள். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்கும் சட்டங்கள் எல்லா இடங்களிலும் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு குறைந்தது இரண்டு தசாப்தங்கள் ஆகும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US