கோவிட் தடுப்பூசிகள் தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ள தகவல்
2021, இன் 3 வது காலாண்டில் கோவிட் தடுப்பூசிகள் கிடைப்பது கணிசமாக அதிகரிக்கும் என்று நம்புவதாக உலக சுகாதார நிறுவனம் நேற்று இலங்கையிடம் தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் (WHO) புதிதாக நியமிக்கப்பட்ட பிரதிநிதியான கலாநிதி அலாகா சிங் கை இலங்கையின் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன தமது அமைச்சகத்தில் வைத்து வரவேற்றார்.
இதன்போது இலங்கை மக்களுக்கு கோவிட் தடுப்பூசிகளைப் பெறுவதில் உலக சுகாதார அமைப்பின் தொடர்ச்சியான ஆதரவை அவர் கோரியுள்ளார்.
இதற்கு பதில் அளித்த உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி, கோவிட் தொற்று நோயை கட்டுப்படுத்துவதிலும், இந்த காலகட்டத்தில் மற்ற சுகாதார சேவைகளின் நிலையான விநியோகத்தை உறுதி செய்வதிலும் தமது அமைப்பின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், இந்த ஆண்டின் 3 வது காலாண்டில் தடுப்பூசிகள் கிடைப்பது கணிசமாக
அதிகரிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
