உலக மகிழ்ச்சி அறிக்கையில் இந்தியா 126ஆவது இடம்: தவறான கணிப்பு என குற்றஞ்சாட்டு
இலங்கையை காட்டிலும் பின்தள்ளப்பட்டு, 2023 உலக மகிழ்ச்சி அறிக்கையில் இந்தியா 126வது இடத்தில் தவறாக இடம் பெற்றுள்ளமை என்பது தவறான கணிப்பு என்று ஸ்டேட் பேங்க் ஒஃப் இந்தியாவின் ஆராய்ச்சி அறிக்கையான எகோர்வாப் தெரிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டுக்கான மகிழ்ச்சி அறிக்கையின்படி போர் சூழந்துள்ள உக்ரைன் 92வது இடத்திலும், நெருக்கடி மிக்க இலங்கையும் பாகிஸ்தானும் முறையே 112வது மற்றும் 108 வது இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன. இது தவறான குறிகாட்டியாகும்.
இந்தியா 48 வது இடத்தில் தரப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்
மகிழ்ச்சியின் அடிப்படையில் இந்தியா 48 வது இடத்தில் தரப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். எனவே உலக மகிழ்ச்சிக் குறியீட்டில் இந்தியா 126 வது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளமையை நிராகரிப்பதாக ஸ்டேட் பேங்க் ஒப் இந்தியாவின் குழுமத் தலைமைப் பொருளாதார ஆலோசகர் சௌமியா காந்தி கோஷ் தெரிவித்துள்ளார்.
பொதுவான மகிழ்ச்சியின் அளவீடுகள், எல்லா நாடுகளுக்குமான மகிழ்ச்சி அறிகுறிகளை உருவாக்க சரியான குறிகாட்டிகளாக இருக்காது.
சரியான குறிகாட்டிகளாக இருக்காது
உலகில் உள்ள வேறு எந்த நாட்டையும் விட இந்தியாவில் மிகவும் பரந்த மற்றும் நற்பண்பு கொண்ட சமூக உறவுகள், மகிழ்ச்சியின் உயர் மட்டத்துடன் நெருங்கிய தொடர்புடைய காரணியாக உள்ளன.
நீண்ட கால மகிழ்ச்சிக்கு மன மகிழ்ச்சியும் மிக முக்கியம்.
இந்தநிலையில் இந்திய மக்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன்
செலவழிக்கும் நேரத்தின் அளவு மகிழ்ச்சியுடன் தொடர்புடையது என்றும் ஸ்டேட்
பேங்க் ஒப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.