வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்திக்கப்போகும் உலகம்!
எதிர்வரும் நாட்களில் உலக பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதிக்கப்படும் என உலக பொருளாதார மன்றத்தின்(WEF) கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) ஆண்டு கூட்டம் 25ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்றுள்ளது.
குறித்த கூட்டத்தில், அமெரிக்காவை சேர்ந்த பிரபல மேலாண்மை ஆலோசனை நிறுவனமான ஆலிவர் வைமனால் (Oliver Wyman) தயாரிக்கப்பட்ட அறிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
பின்னோக்கி நகரும் பொருளாதாரம்
குறித்த அறிக்கையில், உலகம் முன்னர் எப்போதும் இல்லாத வகையில் இனி வரும் நாட்களில் பொருளாதாரத்தில் பின்னோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
எந்த அளவுக்கு எனில் ரூ.51 இலட்சம் கோடியில் தொடங்கி, ரூ.419 இலட்சம் கோடி வரை உலக வர்த்தகம் பாதிக்கப்படலாம்.
உலக நாடுகளின் GDP-ல் இந்த பணம் 5% ஆகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக நாடுகள் மத்தியில் இருக்கும் பிரிவினைகள், தன்னிச்சையாக செயல்படுதல் போன்ற காரணங்களால் இவை ஏற்படும் என்று உலகப் பொருளாதார மன்றம் கணித்துள்ளது.
இதனை 'geoeconomic fragmentation' என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
வளர்ந்து வரும் நாடுகள்
எதிர்வரும் நாட்களில் ஏற்படும் பாதிப்புகள் கடந்த 2008 பொருளாதார வீழ்ச்சியை விடவும், கோவிட் பெரும் தொற்று காலத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை விடவும் மோசமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டாலும் அந்த நாடுகளால் அதனை சமாளித்துக்கொள்ள முடியும்.
ஆனால், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளால் இதை தாங்கிக்கொள்ள முடியாது.
இந்தியா மட்டுமல்லாது பிரேசில், துருக்கி, லத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் வளர்ந்து வரும் நாடுகள் இதனால் கடுமையாக பாதிக்கப்படும்.
இந்த நாடுகளில் GDP 10 சதவிகிதத்திற்கும் குறைவாக போக வாய்ப்புள்ள நிலையில், இவையெல்லாம் அணிசேரா நாடுகளாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |