சுவீடன் காலநிலை அமைச்சராக 26 வயது இளம்பெண் நியமனம்
சுவீடன் நாட்டின் காலநிலை அமைச்சராக 26 வயது இளம் பெண் ரோமினா போர்மக்தாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சுவீடன் நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில், வலது சாரி ஜனநாயக கட்சியின் ஆதரவோடு உல்ஃப் கிறிஸ்டெர்சன் வெற்றி பெற்று பிரதமராக பதவியேற்றார்.
அங்குள்ள மொடரேட் கட்சி, கிறிஸ்தவ ஜனநாயக கட்சி மற்றும் லிபரெல் கட்சி ஆகியவற்றின் கூட்டணியில் இந்த புதிய அரசாங்கத்தின் ஆட்சி அமைத்துள்ளது.
போர்மக்தாரி

இதனை தொடர்ந்து பிரதமர் உல்ஃப் கிறிஸ்டெர்சன் தலைமையில் சுவீடன் அரசாங்கத்தின் அமைச்சரரவை இன்று அமைக்கப்பட்டது.
இதில் லிபரெல் கட்சியின் இளைஞர் அணி தலைவியான 26 வயது இளம்பெண் ரோமினா போர்மக்தாரி காலநிலை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.
இதன் மூலம் சுவீடன் நாட்டின் மிக இளம் வயது அமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
ரோமினாவின் குடும்பம் ஈரான் நாட்டை பூர்வீகமாக கொண்டிருந்தாலும், அவர் சுவீடன்
தலைநகரான ஸ்டாக்ஹோமில் பிறந்தவர் ஆவார்.
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri
உக்ரைனுக்கு இன்னொரு பேரிடி... புடினுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ட்ரம்ப் News Lankasri
பிக்பாஸ் 10ல் குமரன் ரூ. 5 லட்சம் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததற்கான காரணம் என்ன தெரியுமா? Cineulagam