பிரித்தானியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பாரிய வெடி விபத்து: ஒருவர் பலி- பலர் மாயம்
பிரித்தானியா- ஜெர்சி தீவின் தலைநகரான செயின்ட் ஹீலியரில் மூன்று தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
இவ்விபத்து சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலர் காணாமல் போயுள்ளதுடன், இருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தரைமட்டமான குடியிருப்பு கட்டிடம்
இச்சம்பவத்தில் குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென குண்டுவெடித்தது போன்று பலத்த சத்தம் எழுந்துள்ளது, சத்தம் வந்த சில வினாடிகளில் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது.
இதில் கட்டிடம் முழுமையாக சிதைந்து தரைமட்டமானது. இதில் அருகில் உள்ள குடியிருப்பு கட்டிடமும் சேதமடைந்துள்ளது.
மீட்பு பணிகள் தீவிரம்
விபத்து பற்றி தகவல் அறிந்த பொலிஸார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவாக்ளுக்கு ஜெர்சி முதல்வர் கிறிஸ்டினா மூர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் குண்டுவெடிப்பால் இடம்பெயர்ந்தவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri
