சர்வதேச சுற்றுச் சூழல் தின வாரம் கந்தளாயில்
உலக சுற்றுச்சூழல் தின தேசிய கொண்டாட்டத்துடன் இணைந்து தேசிய சுற்றுச்சூழல் வாரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சுற்றுச்சூழல் வாரம் மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 05 ஆம் திகதி வரை தொடர் நிகழ்ச்சிகளை நடாத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அந்த வகையில் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தின் முக்கியமான நீர்வளமான கந்தளாய் நீர்த்தேக்கக் கரையோரம் அதைச் சுற்றியுள்ள சுற்றுச்சூழலையும் சுத்தம் செய்யும் பணிகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டது .
சுற்றுச்சூழல் தினம்
இன் நிகழ்வு, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஷன் அக்மீமன தலைமையில் இடம்பெற்றள்ளது.
இதில் நீர்ப்பாசனத் திணைக்களம், விவசாயத் திணைக்களம், பிரதேச செயலகம், சிவில் பாதுகாப்புப் படை, இராணுவம் உள்ளிட்ட பல அரசு நிறுவனங்களைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.
விழிப்புணர்வூட்டும் நடைபவணி
மேலும், உலக சுற்றுச்சூழல் வாரத்தினை முன்னிட்டு "பிளாஸ்டிக் மாசுபாட்டினை முடிவுக்கு கொண்டு வருதல்" எனும் தொனிப் பொருளில் திருகோணமலை கூட்டுறவு உதவி ஆணையாளர் அலுவலகத்தினால் இன்று (04) பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடைபவணி முன்னெடுக்கப்பட்டது.
திருகோணமலை கூட்டுறவு உதவி ஆணையாளர் அலுவலகமும் திருகோணமலை பல நோக்கு கூட்டுறவுச் சங்கமும் இணைந்து இன்றைய தினம் இந்த விழிப்புணர்வு நடைபவணியை ஏற்பாடு செய்திருந்தது.
குறித்த நடைபவனியானது கூட்டுறவு உதவி ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு பிரதான வீதி, கடல்முக வீதி, மின்சார நிலைய வீதியினூடாக மீண்டும் அலுவலகத்தை சென்றடைந்தது.
இதன்போது “இயற்கையை நேசிப்போம் அதை மனிதருக்கு போதிப்போம்”, “வளமான பூமியே மனிதருக்கு வளம் தரும் சாமி”, போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு உத்தியோகத்தர்கள் நடைபவணியில் ஈடுபட்டிருந்தனர்.







நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் மாலை - திருவிழா



