கிளிநொச்சியில் இடம்பெற்ற உலக சுற்றாடல் தின நிகழ்வு
கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் உலக சுற்றாடல் தின நிகழ்வையொட்டி விசேட விழிப்புணர்வுக் கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வானது, இன்று (30.05.2024) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் பயனுறுதிமிக்க நிலப்பயன்பாட்டினூடாக நலம் நிறைந்த நாடு என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்றுள்ளது.
இதன்போது, உலக சுற்றாடல் தினம் மற்றும் தொனிப்பொருள் தொடர்பான விளக்கக்காட்சி மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் சிரேஷ்ட உத்தியோகத்தரால் நடத்தப்பட்டுள்ளது.
விசேட கருத்தரங்கு
மேலும், காடுகளை பேணுவதன் மூலம் நிலவள முகாமைத்துவம் தொடர்பிலான கருத்தரங்கு வன வளத்திணைக்களத்தின் கிளிநொச்சி மாவட்ட உத்தியோகத்தரால் நடத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தனியார் நிறுவனமொன்றின் விளக்கக் காட்சி காண்பிக்கப்பட்டுள்ளதுடன், நிலவளக் குறைதலுக்குரிய காரணங்களும் தடுப்பு நடவடிக்கை சாத்தியங்களும் மற்றும் தொழில்நுட்ப உத்திகளும் குறித்து கிளிநொச்சி மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் கிளையின் உதவிப்பணிப்பாளர் விளக்கக் காட்சியை நிகழ்த்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |