சீன வீரரை வீழ்த்தி செஸ் செம்பியன்ஷிப் பட்டத்தை தன்வசப்படுத்திய தமிழ்நாட்டு வீரர்
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் தொடரின் வெற்றியாளர் பட்டத்தை இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ் தன்வசப்படுத்தியுள்ளார்.
நடப்பு செம்பியனான சீனாவின் டிங் லிரென்குடன் இடம்பெற்ற இறுதிப்போட்டியில் அவர் குறித்த வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளார்.
13 சுற்றுகள் முடிவில் இருவரும் தலா இரண்டு சுற்றுகளில் வெற்றி பெற்று இருந்த நிலையில், இதனால், இருவரும் தலா 6½ புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தார்கள்.
🇮🇳 Gukesh D will be going Bungee jumping!
— International Chess Federation (@FIDE_chess) December 12, 2024
He reveals how the decision to go bungee jumping came about! 🪂#DingGukesh pic.twitter.com/cDwpP75jLM
14ஆவது மற்றும் கடைசி சுற்று
இந்நிலையில், இன்று 14ஆவது மற்றும் கடைசி சுற்று சிங்கப்பூரில் நடைபெற்றது.
இதில் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடி சீன வீரரை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.
இதில் 58 ஆவது காய் நகர்த்தலுக்குப் பிறகு டிங் லிரென் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார்.
இதனால் 18 வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று குகேஷ் சாதனைப் படைத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |