மின்சார சபையின் உத்தேச சீர்திருத்தங்கள் தொடர்பில் உலக வங்கி நிபுணர்களுடன் கலந்துரையாடல்
இலங்கை மின்சார சபையின் உத்தேச சீர்திருத்தங்கள் தொடர்பில் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர உலக வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
மின்சாரத்துறையின் சீர்திருத்தங்களுக்கு உதவும் உலக வங்கி குழு தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் நிதி நிலைகள், பரிமாற்றத் திட்டங்கள் மற்றும் சட்டக் கட்டமைப்புகளை பகுப்பாய்வு செய்வதில் தொழில்நுட்ப உதவியுடன் உலக வங்கி முன்மொழியப்பட்ட மின்சார சபையின் சீர்திருத்தங்களுக்கு உதவுவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தொழில்நுட்ப மற்றும் நிதி உதவி
World Bank team assisting the reforms of the electricity sector visited the Ministry of Power & Energy yesterday. World Bank has been assisting the proposed CEB reforms with technical assistance in analyzing the financial positions of CEB, transfer plans & legal frameworks.
— Kanchana Wijesekera (@kanchana_wij) September 22, 2023
We… pic.twitter.com/YcZNpNDCQD
மேலும், சீர்திருத்தங்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான போட்டி ஏலக் கட்டமைப்புகள் மற்றும் எரிசக்தி செயல்திறனுக்கான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவி தொடர்பான தகவல் தொடர்பு தளத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், உலக வங்கியின் எரிசக்தி நிபுணர்கள் மற்றும் மின்துறை சீர்திருத்த செயலகத்தின் தலைவர் ஆகியோர் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.