மட்டக்களப்பில் பயங்கரவாத தடுப்புச்சட்டம் தொடர்பில் செயலமர்வு
இலங்கையில் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டம் மற்றும் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் தொடர்பில் அறிவுறுத்தும் செயலமர்வு மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வு கிழக்கு சமூக அபிவிருத்தி மையம் ஏற்பாட்டில் இன்று (17.01.2024) மட்டக்களப்பு மன்றேசாவில் இடம்பெற்றுள்ளது.
கிழக்கு அபிவிருத்தி ஒன்றியத்தின் பணிப்பாளர் புஹாரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், சிரேஸ்ட சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான பவானி பொன்சேகா, மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் பணிப்பாளர் இஸ்ஸடீன் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.
சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் பாதிப்புகள்
இந்த நிகழ்வில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், மதத்தலைவர் என பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது, அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டம்
சமர்ப்பிக்கப்படவுள்ள நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் தொடர்பில் பல்வேறு
கருத்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.
அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டங்கள் தொடர்பில் சிவில் சமூக
செயற்பாட்டாளர்கள் மற்றும் மதத்தலைவர்கள், ஊடகவியலாளர்களின் கருத்துகள்
இதன்போது பெறப்பட்டுள்ளன.
அத்துடன், இந்த சட்டத்தினால் சிறுபான்மை சமுகம் எதிர்கொள்ளும் பாதிப்பு பிரச்சினைகள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த சட்ட மூலத்தினை நிறைவேற்றாமல் தடுப்பதற்கு முன்னெடுக்க வேண்டிய வழி வகைகள் குறித்தும் இங்கு ஆராயப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

சண்டே ஸ்பெஷல்: இந்த வாரம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் எது தெரியுமா?.. வெளிவந்த புரொமோ Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam
