பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் தொடர்பான செயலமர்வு
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்தும் செயலமர்வு திருகோணமலை மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள (Saman Darshana Pandikorala) தலைமையில் நடைபெற்றது.
மின் இணைப்பை பெற்றுக்கொள்வதற்கான வழியனுமதி, மரங்கள் அல்லது கிளைகளை வெட்டுதல், நஷ்ட்டஈடு வழங்கல் தொடர்பான வழிகாட்டல்கள் இதன்போது ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் ரோசன் வீரசூரியவால் (Rosen Weerasuriya) தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மக்களுக்கான பல சேவைகளை மேற்கொண்டு வருகின்றது.மின் இணைப்பு மிக முக்கியமானது. மின் இணைப்பு பெறுகின்ற சந்தர்ப்பத்தில் அதற்கான வழியனுமதி பெறும் முறை, வழியனுமதி மறுக்கப்படும் போது பிரதேச செயலாளர்களின் வகிபாகம் குறித்து சட்ட ரீதியான அடிப்படைகளை தெளிவுபடுத்த முன்வந்தமை குறித்து தமது நன்றிகளை இதன்போது சமன் தர்சன பாண்டிகோராள ஆணைக்குழுவுக்கு தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் (J.S. Arulraj), மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பி.ஆர்.ஜயரத்ன(P. R. Jayaratne), பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்களும் கலந்து
கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது




பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
