நுவரெலியாவில் படகு சவாரி தொழிலாளர்கள் பாதிப்பு
நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் பல்வேறு பன்முக பண்புகளை கொண்ட கிரகறி வாவியில் நாட்டில் நிலவிய மோசமான காலநிலையால் படகு சவாரி முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் நுவரெலியா கிரகறி வாவி பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குறைந்து வெறிச்சோடி காணப்படுவதுடன், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கும் சுற்றுலா பயணிகள் படகில் சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தேங்கிய கழிவுகளை அகற்ற
குறிப்பாக, தற்போது படகுகள் நீரில் அடித்து செல்லாமல் இருக்க கயிறு மூலம் கரையோரத்தில் உள்ள மரங்களில் பாதுகாப்பாக கட்டி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலா பயணிகளை நம்பி பிழைப்பு நடத்தி வந்த படகு சவாரி தொழிலாளர்கள் கடந்த மாதம் (27) ஆம் திகதி முதல் இன்று (10.12.2025) வரை மழை வெள்ளம் மற்றும் காற்றுக் காரணமாக தங்களுடைய வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டு உள்ளனர் என தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
படகு சவாரி செய்யும் பகுதிகளில் தற்போது தேங்கிய கழிவுகளை அகற்ற வேண்டும் எனவும் தற்போது கிரகரி வாவியில் தேக்கி வைக்கப்பட்ட கழிவு நீர் வெளியேற்றப்பட்டு புதிய சுத்தமான நீரை சேமிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நுவரெலியாவில் மழை குறைந்த பின் படகுகளில் செல்ல வழக்கம்போல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கபடுவார்கள் என பொறுப்பான அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri