புலி தாக்குதலுக்கு இலக்காகி தொழிலாளி படுகாயம்: ஹட்டன் பகுதியில் சம்பவம்
ஹட்டன் பகுதியிலுள்ள மலைப்பிரதேசத்தில் புலியொன்றின் தாக்குதலுக்கு இலக்காகி தேயிலைத் தோட்டத் தொழிலாளி ஒருவர் படு காயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்றைய தினம் (24.05.2023) காலை பொகவந்தலாவை பிரதேசத்தில் ,இடம்பெற்றுள்ளது.
பொகவந்தலாவை பிரிட்வேல் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் தேயிலைப் பற்றைகளுக்கு மறைவில் ஒளிந்திருந்த புலியொன்றின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
நல்லதண்ணி வனசீவராசிகள்
அதனையடுத்து காயமடைந்த தொழிலாளி, பொகவந்தலாவை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்த டிக்ஓய மாவட்ட மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தொழிலாளியைத் தாக்கிய புலியை காட்டுப் பகுதிக்கு விரட்டியடிக்குமாறு நல்லதண்ணி வனசீவராசிகள் அலுவலகத்துக்கு அறிவித்தல் வழங்கியுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan
