வவுனியாவில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் பணி
நாடளாவிய ரீதியில் 12 தொடக்கம் 19 வயதுக்குட்பட்ட விசேட தேவையுடைய சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் வட மாகாணத்திலும் அண்மையில் இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
அந்தவகையில் குறித்த சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் வவுனியா மாவட்ட வைத்தியசாலையிலும் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முதற்கட்டமாக 60 பேருக்கு இன்றையதினம் தடுப்பூசி வழங்கப்பட இருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மன்னாரில் இருந்து வருகைதந்த வைத்தியர் சுதாகர் தலைமையிலான தாதியர்கள், வவுனியா வைத்தியசாலை வைத்தியர்கள் மற்றும் சுகாதாரத்துறையினருடன் இணைந்து குறித்த தடுப்பூசி ஏற்றும் பணிகளை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.














உக்ரைன் உடைந்து சின்னாபின்னமாகும்... இந்த இரண்டு நாடுகளும் உலகை ஆளும்: எச்சரிக்கும் வாழும் நோஸ்ட்ராடாமஸ் News Lankasri

பாக்கியலட்சுமி சீரியல் நடிகையின் மருமகளுக்கு குழந்தை பிறந்தது.. நடிகை வெளியிட்ட மகிழ்ச்சியான வீடியோ Cineulagam
