திருகோணமலையில் பெண்கள் பாதுகாப்பு குறித்து கவனயீர்ப்பு போராட்டம்
திருகோணமலை (Trincoamalee) - மூதூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தங்கநகர் பகுதியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது, இன்று (10.09.2024) கிளிவெட்டி - தங்கநகர் பகுதி சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்ட கோரிக்கை
அண்மையில் நடேஸ் குமார் வினோதினி எனும் யுவதி கொலை செய்யப்பட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

இதனை கண்டித்தே அப்பகுதி பொதுமக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, குறித்த யுவதியின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் பிணை வழங்கக் கூடாது எனவும் கோரி பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்மதை முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri