தங்க ஆபரணங்கள் அணியும் பெண்களுக்கு காத்திருக்கும் ஆபத்து! பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை
தங்க ஆபரணங்கள் அணியும் பெண்களின் முகத்தில் மிளகாய்த் தூளை வீசி தங்க ஆபரணங்களை கொள்ளையிடும், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் 5 பேரை களுத்துறை தெற்கு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இன்றைய தினம் (05.06.2023) முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் களுத்துறை, பன்விலாஹேனவத்த பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டு முச்சக்கரவண்டிகள் மற்றும் திருடப்பட்ட மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் சந்தேகநபர்கள் 5 பேரும் வீதியில் செல்லும் பெண்களின் முகத்தில் மிளகாய்த்தூளை வீசி அவர்களைத் தாக்கி தங்க நகைகளைக் கொள்ளையடித்து வந்துள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
இந்த நிலையில், பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட தங்க நகைகள், ஜெனரேட்டர், கார் கழுவும் இயந்திரம், இரண்டு கையடக்கத் தொலைபேசிகள், இரண்டு முச்சக்கரவண்டிகள் மற்றும் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை களுத்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
