கொழும்பை அச்சுறுத்திய பெண்கள் கும்பல் : ஹீரோவாக செயற்பட்ட பேருந்து நடத்துநர்
கொழும்பில் பேருந்துகளில் தங்க நகைகளை திருடும் பெண்கள் கும்பல் தொடர்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு தப்பிச் சென்ற போது, இரண்டு பெண்கள் பேருந்து நடத்துனரால் துரத்தி பிடிக்கப்பட்டு கொட்டாவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சந்தேக நபர்கள் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிப்படுத்தப்பட்ட பின்னர், இருவரும் 14 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பணப்பை மற்றும் தங்க சங்கிலி
இந்த பெண்கள் கும்பலில் நான்கு பேர் பணப்பை மற்றும் தங்க சங்கிலிகளை திருடிவிட்டு தப்பிச் சென்ற நிலையில், நேற்று முன்தினம் கொட்டாவ - பொரளை வழித்தட எண் 174 இல் உள்ள தனியார் பேருந்து நடத்துனர் அவர்களைப் பின்தொடர்ந்து ஓடி, கும்பலில் இருவரை மிகவும் சிரமப்பட்டுப் பிடித்தார்.

அவர்கள் பிடிபட்டவுடன், கொட்டாவ நகரம் முழுவதும் மக்கள் அளவில் கூடியதால் நகரம் முழுவதும் பரபரப்பானது. குறித்த இரண்டு பெண்களும் அழுதுகொண்டே தங்களை செல்ல அனுமதிக்குமாறு கெஞ்சியுள்ளனர்.
புத்தளத்தைச் சேர்ந்த 32 மற்றும் 42 வயதுடைய பெண்களே இவ்வாறு சிக்கியுள்ளனர். அவர்களது கும்பலில் நான்கு பேர் இருந்ததாகவும், அவர்கள் பேருந்துகளில் ஏறி பைகள் மற்றும் தங்க சங்கிலிகளை திருடி தப்பிச் சென்றமை தெரியவந்துள்ளது.
தங்க நெக்லஸ்
174வது பேருந்து வழித்தடத்தில் வயதான பெண்ணின் பணப்பையை இந்த பெண்கள் திருடிவிட்டு தப்பிச் செல்வதைக் கண்ட பேருந்து நடத்துனர், அவர்களைத் துரத்திச் சென்று அவர்களில் இருவரைப் பிடித்தார்.

அவர்களின் பைகளைச் சோதனை செய்தபோது, வயதான பெண்ணிடமிருந்து திருடப்பட்ட பணப்பை மற்றும் சுமார் 2 பவுன் மதிப்புள்ள தங்க நெக்லஸ் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அவர் இரண்டு பெண்களை பொலிஸார் ஒப்படைத்தார்.
தப்பி ஓடிய இரண்டு சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
பேருந்து நடத்துனரின் செயற்பாட்டிற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri