இரண்டு பெண்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு! உயர் நீதிமன்றம் அனுமதி
இலங்கை தொடருந்து திணைக்களம் விதித்த பாலின அடிப்படையிலான கட்டுப்பாட்டை எதிர்த்து இரண்டு பெண்கள் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவைத் தொடர இலங்கை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த வழக்கு நேற்றையதினம்( 11) மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு முன் விசாரிக்கப்பட்டது.
மனுதாக்கல்
கடந்த ஜூன் 13 அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு மூலம், 106 வெற்றிடம் உள்ள தொடருந்து நிலைய அதிபர் பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்ட நிலையில் ஆண் விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே தகுதியை கட்டுப்படுத்தியது.
இந்த விலக்கு அரசியலமைப்பை மீறுவதாகவும், பாலின சமத்துவத்துக்கு எதிரானது எனவும் அதனை சவாலுக்கு உட்படுத்தி மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த கட்டுப்பாடு மனுதாரர்கள் தாங்கள் விரும்பும் துறையில் வேலை தேடும் உரிமையை மறுக்கிறது என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
உயர் நீதிமன்றம்
மனுதாரர்கள் தங்கள் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக நீதிமன்ற அறிவிப்பைக் கோருவதுடன் அறிவிப்பில் உள்ள பாரபட்சமான பிரிவை நீக்குமாறும் கோருகின்றனர்.
சமர்ப்பிப்புகளைப் பரிசீலித்த உயர் நீதிமன்றம், வழக்கைத் தொடர அனுமதி அளித்து, ஆகஸ்ட் 27 ஆம் திகதி விசாரணைக்கு ஒத்திவைத்தது.