இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை மகளிர் தின விழா
இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை மகளிர் அணியினால் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டுள்ளது.
இந்நிகழ்வு முன்னாள் தவிசாளரும் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை மகளிர் அணி செயற்றபாட்டளருமான நாகரஞ்சினி ஐங்கரன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த மகளிர் தின நிகழ்வானது நேற்று முன்தினம் (30.03.2024) இடம்பெற்றுள்ளது.
மகளிர் தின நிகழ்வு
இதன் போது, வட்டுக்கோட்டை தொகுதியில் உள்ள மகளிர் சங்கத்தின் உறுப்பினர்கள், வட்டுக்கோட்டை தொகுதியின் தாய்மார் கழகங்களின் உறுப்பினர்கள்,முன்பள்ளி ஆசிரியர்கள்,60 வயது கடந்த நிலையில் முன்பள்ளி சேவையில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான கௌரவிப்பும் சான்றிதழ் வழங்கும் வைபவமும் நடைபெற்றுள்ளது.
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வர் சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்துள்ளார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட யசோதா சரவணபவன் மற்றும் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளை தலைவர் ஈஸ்வரபாதம் சரவணபவனால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கபட்டுள்ளது.
தொடர்ந்து பொன்னாலை சந்திர பரத கலாலய மாணவிகளால் சிறிதேவி கண்ணதாசன் அவர்களின் நெறியாள்கையுடன் சிறப்பு நடனமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
செய்தி : கஜிந்தன்