மருந்து தட்டுபாட்டினால் இடைநிறுத்தப்பட்ட சத்திரசிகிச்சை: கைக்கொடுத்த மகளிர் அமைப்பு(Video)
நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவ துறையும் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளது.
இதற்கமைய வைத்தியசாலைகளில் மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்கு பெரும் தட்டுபாடு நிலவுகின்றது.
இந்நிலையில் நேற்று (02) கொய்லி மகளிர் நிறுவனத்தினால் சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சைக்கு தேவையான சத்திரசிகிச்சை உபகரணங்கள் மற்றும் மருந்துகள் என்பன NINDO வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த உதவி பொருட்கள் சுமார் 1.2 மில்லியன் பெறுமதி என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த உதவி சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை வெற்றிகரமாக தொடர்வதற்கு உதவியாக அமைந்துள்ளது என வைத்தியசாலை நிர்வாகத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.