மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட பெண்
கம்பளை நவதேவிட்ட பிரதேசத்தில் வீடொன்றில் பெண் ஒருவர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் நேற்று கிடைத்த தகவலின் அடிப்படையில் கம்பளை பொலிஸ் நிலையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கம்பளை பிரதேசத்தை சேர்ந்த 63 வயதான நவதேவிட்ட பிரதேசத்தை சேர்ந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பெண் கொலை
மகள் வேலைக்கு சென்றதையடுத்து, குறித்த பெண் வீட்டில் தனியாக இருப்பதாகவும் மகள் வேலை முடிந்து வீடு திரும்பி நிலையில் தாயாரை தேடியதாகவும் அவரை காணவில்லை எனவும் மகள் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர் வீட்டில் கட்டிலுக்கு கீழ் தனது தாயின் சடலம் கழுத்து கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், சந்தேக மரணம் என கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.