மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு மண்ணில் புதைக்கப்பட்ட யுவதி
கண்டியில் இளம் யுவதி ஒருவர் மர்மான முறையில் படுகொலை செய்யப்பட்டு மண்ணில் புதைகப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தெல்தெனிய, ரங்கல பகுதியில் 22 வயதான ஆடைத் தொழிற்சாலை ஊழியரான யுவதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய ரங்கல பொலிஸ் பொறுப்பதிகாரி நிஷாந்த ஜெயரத்ன தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
யுவதி கொலை
அதற்கமைய யுவதி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர், உதிஸ்பட்டுவ, ஹக்மான பகுதியை சேர்ந்த 22 வயதான வசன சந்தமாலி என ரங்கல பொலிஸாரால் உறுதிப்படுத்தபட்டுள்ளது.
தெல்தெனிய நீதவான் கமல் சஞ்சய ஜெயதிலக சடலம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் நேரில் விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ரங்கல பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam