மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி
களுத்துறை, நாகொட போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளம் பெண் ஒருவரிடம் தவறாக நடந்துக் கொண்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் எக்ஸ்ரே பரிசோதனைக்காக டிராலியில் வைக்கப்பட்டிருந்த போது, அவரது அங்க சேட்டை ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் மருத்துவமனை ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் தற்காலிகமாக சுகாதார உதவியாளர் தொழிலுக்கு நியமிக்கப்பட்ட ஒருவர் என்று மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
சந்தேக நபர்
இது தொடர்பில் கிடைத்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் கைது செய்யப்பட்ட போது மருத்துவமனை ஊழியர்களிடமிருந்து எதிர்ப்பு எழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர் களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri