சூம் தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி பெண்கள் செய்து காரியம்
இணையத்தளத்தில் விளம்பரங்களை வெளியிட்டு, சூம் தொழிற்நுட்பத்தின் ஊடாக பாடசாலைகளில் சாதாரண தரம் மற்றும் உயர் தரம் படிக்கும் மாணவர்களை இலக்கு நடத்தப்பட்டு வந்த பாலியல் தொழில் விடுதியை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
விளம்பரங்களை பார்த்து பெண்களை அணுகிய பாடசாலை மாணவர்கள்

இந்த பாலியல் தொழில் விடுதி நுகேகொடையில் உள்ள வீடமைப்பு தொகுதி ஒன்றில் நடத்தப்பட்டு வந்துள்ளது. நேற்று விடுதியை முற்றுகையிட்டு அங்கு இருந்த இரண்டு பெண்களை கைது செய்துள்ளதாகவும் பாலியல் சம்பந்தப்பட்ட சில பொருட்களை கைப்பற்றியுள்ளதாகவும் நுகேகொடை குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் தாம் வழங்கும் சேவை தொடர்பாக இணையத்தளத்தில் விரிவான விளம்பரத்தை செய்துள்ளதாகவும் நுகேகொடை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் விளம்பரங்களை பார்த்து இந்த பெண்களை அணுகியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பொலிஸாரிடம் சிக்காது நீண்டகாலமாக விடுதியை நடத்திய பெண்கள்

கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் மினுவங்கொடை மற்றும் மத்துகமை பிரதேசங்களை சேர்ந்த 45 மற்றும் 43 வயதானவர்கள் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த பெண்கள் மிக நீண்டகாலமாக மிகவும் சூட்சுமான முறையில் பொலிஸாரின் கண்களில் சிக்காது குறித்த இடத்தில் பாலியல் தொழில் விடுதியை நடத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் இன்று நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
மரண வீட்டில் அரசியல்.. 1 நாள் முன்
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri
விஜயா செய்த கேவலமான வேலை, ஆத்திரத்தில் அடிக்க சென்ற அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam