கோர விபத்தில் பரிதாபமாக பலியான பெண்
கொழும்பின் புறநகர் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொட்டுகொட பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் அவர் உயிரிழந்துள்ளதாக ஜா - எல பொலிஸார் தெரிவித்தனர்.
கொட்டுகொட பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.
சீதுவை வைத்தியசாலை
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியில் பயணித்த பெண் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
படுகாயமடைந்த பெண்ணும் இன்னுமொருவரும் சீதுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக ராகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட்ட நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 5 மணி நேரம் முன்

சோழனை கடத்தியது யார், நிலாவிடம் மொத்த உண்மையையும் கூறிய பல்லவன்.. அய்யனார் துணை பரபரப்பு புரொமோ Cineulagam

மகாநதி சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் கோமதி பிரியா.. குவியும் வாழ்த்துக்கள் Cineulagam
