இலங்கை வைத்தியசாலையில் மற்றுமொரு சோகம் - பல் பிடிங்கிய யுவதி மரணம்
தென்னிலங்கையில் பல் பிடுக்கப்பட்ட நிலையில் ஏற்பட்ட சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஹொரணை பகுதியில் கடந்த 28 ஆம் திகதி இரவு குறித்த யுவதி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
பண்டாரஹேன, பொக்குனுவிட்ட பகுதியை சேர்ந்த 20 வயதான தேவ்மி மதுஷிகா என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யுவதி மரணம்
மேல் தாடையின் நுனியில் உள்ள பல்லில் வலி ஏற்பட்டதால், அந்த இளம் பெண் கடந்த 14 ஆம் திகதி தனியார் வைத்தியசாலையில் பல் பிடுங்கியுள்ளார்.

இதனையடுத்து அவர் தொடர்ந்து வாந்தி எடுத்து வயிற்றுப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு, மறுநாள் சிகிச்சைக்காக தனியார் நிறுவனத்திற்குச் சென்றார்.
இதன்போது அவரது இரத்த அழுத்தம் குறைவாக இருப்பதாகவும், வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மரண விசாரணை
ஹொரணை மாவட்ட பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், யுவதி உயிரிழந்துள்ளார்.

சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகள் மற்றும் மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில், ஹொரணை மரண விசாரணை அதிகாரி சுமேத குணவர்தன இந்த மரணம் குறித்து ஒரு திறந்த தீர்ப்பை வெளியிட்டு, மரணம் குறித்து மேலும் விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.