தனியார் மருந்தகத்தை நம்பியிருந்த பெண் ஒருவருக்கு நேர்ந்த கதி
களுத்துறை மாவட்டம்-இங்கிரியவில் அமைந்துள்ள தனியார் மருந்தகம் ஒன்றில் பெறப்பட்ட மருந்தை உட்கொண்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இங்கிரிய, உருகல பிரதேசத்தில் வசிக்கும் 62 வயதுடைய பெண் ஒருவரே நேற்று (21.08.2023) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், சிறுநீரக நோய்கள் உள்ளிட்ட நோய்கள் இருப்பதாகவும், அதற்காக அவர் மருந்துகளை கொள்வனவு செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கடந்த ஜூலை 31ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை தனியார் மருந்தகத்திலிருந்து குறித்த பெண் மருந்துகளை வாங்கியுள்ளார்.
இந்த மருந்தை உட்கொண்டதன் பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததாகவும், அதனைத் தொடர்ந்து அவர் இங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், பாதிக்கப்பட்டவரின் நிலை தொடர்ந்து மோசமடைந்தது, பின்னர் அவர் ஹொரண ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதையடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரூ. 4000 கோடி பட்ஜெட் ராமாயணா படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்... கணிக்கப்பட்ட விவரம் Cineulagam
ஐரோப்பா மொத்தம் விடுக்கப்பட்ட எச்சரிக்கை... பிரித்தானியாவின் இரண்டு விமான நிலையங்களுக்கு மிரட்டல் News Lankasri