யாழ்ப்பாண வணிகர் கழகத்தினரை சந்தித்த சங்கு சின்னத்தின் பெண் வேட்பாளர்கள்
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பெண் வேட்பாளர்கள் யாழ்ப்பாண வணிகர் கழகத்தினரைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த சந்திப்பு, நேற்றையதினம் (17.10.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வன்னி மாவட்ட முன்னாள் போராளியான கருணாநிதி யசோதினி, யாழ்ப்பாண மாவட்ட பெண் வேட்பாளர் சசிகலா ரவிராஜ் மற்றும் யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் தலைவர் இ.ஜெயசேகரம் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
பெண் வேட்பாளரின் முக்கியத்துவம்
அத்துடன், எதிர்வரும் தேர்தலி்ல் பெண் வேட்பாளரின் முக்கியத்துவம், பெண்களை அரசியலில் ஈடுபடுவதன் நோக்கம் மற்றும் பெண்களின் ஏன் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதன்போது, கட்சியின் ஆதரவாளர்கள், போராளிகள் நலம்புரிச் சங்க தலைவர் ஈஸ்வரன் தமிழ் தேசிய செயற்பாட்டாளர் குழுமம் முன்னாள் போராளிகள் யாழ்ப்பாண வணிகர் கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







அகிலம் போற்றும் பாரதம், விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் மகாபாரதம்... வெளிவந்த விவரம் Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri