ஏறாவூர் பிரதேசத்தில் திடீரென சுற்றிவளைக்கப்பட்ட வீடு: வசமாக சிக்கிய பெண்
ஏறாவூர் பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபார விற்பனை நிலையமாக செயற்பட்டுவந்த வீடு ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது பெண் வியாபாரி ஒருவரை 5350 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்ததுடன், அவரிடம் இருந்து 3 இலட்சத்து 61 ஆயிரம் ரூபா பணத்தை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் முற்றுகை
மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து ஏறாவூர் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் நேற்று பிற்பகல் குறித்த பிரதேசத்திலுள்ள ஏறாவூர் முதலாம் பிரிவிலுள்ள கலைமகள் பாடசாலை வீதியில் உள்ள போதைப்பொருள் விற்பனை செய்து வந்த வீட்டை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 56 வயதுடைய பெண் வியாபாரியே கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளதாவும், அவரை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam
அசின், சிம்பு இணைந்து நடிக்கவிருந்த கைவிடப்பட்ட படம்.. இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா! First லுக் போஸ்டர் இதோ Cineulagam
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri