கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாலையில் சிக்கிய இளம் பெண்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 55 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண் என தெரியவந்துள்ளது.
பெண் கைது
குறித்த பெண் வெளிநாடுகளுக்கு சென்று பல்வேறு பொருட்களை இலங்கைக்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தவர் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இன்று அதிகாலை டுபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானமான EK-648 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததுடன், அவரது பயணப் பொதிகளை பரிசோதித்த போது, இந்த சிகரெட் பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பிணையில் விடுதலை
36,800 சிகரெட்டுகள் அடங்கிய 184 பெட்டி சிகரெட்டுகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 2ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri
