கொழும்பில் சிக்கிய பெண் - விசாரணையில் அம்பலமான பாரிய மோசடி கும்பல்
கொழும்பு, பொரலஸ்கமுவவில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்ட பெண் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த பெண்ணிடம் இருந்து போலி அடையாள அட்டைகள் உள்ளிட பல ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளில், வெலிகடையில் உள்ள ஒரு ஆடம்பரமான 4 மாடி வீட்டின் உரிமையாளர், மற்றொரு நபருடன் இணைந்து மேற்கொண்டு வந்த போலி அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஆவண தயாரிப்பு மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தலைமைப் பரிசோதகர்
இரண்டு சந்தேக நபர்களுடன், கணினி, அச்சுப்பொறி, லேமினேட்டிங் இயந்திரம், போலி தேசிய அடையாள அட்டைகள், போலி வருமான அனுமதி பத்திரங்கள், வெளிநாட்டு விசாக்களின் பிரதிகள், கல்விச் சான்றிதழ்கள், வெளிநாட்டு பாடநெறிச் சான்றிதழ்கள் மற்றும் பல்வேறு போலிச் சான்றிதழ்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி, தலைமைப் பரிசோதகர் சமிந்த குலசிங்க தலைமையிலான குழுவினர், பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள ஒரு மசாஜ் நிலையத்தை சோதனை செய்து, இரண்டு தேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணைக் கைது செய்தார்.
விசாரணையின் போது, அடையாள அட்டைகளில் ஒன்று போலியானது என்பது தெரியவந்தது.
மேலும் சந்தேக நபரிடம் விசாரித்தபோது இந்த மோசடியின் முக்கியஸ்தர் தொடர்பில் தகவல் வெளிப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.