விபத்தில் சிக்கிய குடும்பப்பெண் : யாழ். போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு
யாழில் (Jaffna) மகளை கல்வி நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பெண் ஒருவர் வாகனம் மோதியதில் நேற்றிரவு (26) உயிரிழந்துள்ளார்.
31ஆம் கட்டை, முழங்காவில் பகுதியைச் சேர்ந்த கமல் நகுலமலர் (வயது 44) என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை பெற்று வந்த நிலையில்
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், நேற்று முன்தினம் (25) இவர் மகளை கல்வி நிலையத்திற்கு, நடந்து கூட்டிச் சென்றுள்ளார்.
இதன்போது பின்னால் வந்த வாகனம் ஒன்று குறித்த பெண் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் மயக்கமடைந்துள்ளார்.
பின்னர் சாரதி முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
படுகாயமடைந்த பெண், முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்ன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எனினும், அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 1 மணி நேரம் முன்

நான் இன்னும் அந்த இழப்பில் இருந்து வெளியே வரவில்லை, இன்னும் கொஞ்சம்.. பிக்பாஸ் புகழ் ஷிவானி எமோஷ்னல் Cineulagam

F-1 Visa ரத்து... நூற்றுக்கணக்கான மாணவர்களை நாட்டைவிட்டு வெளியேற ஆணையிட்ட ட்ரம்ப் நிர்வாகம் News Lankasri
