கொழும்பில் மர்ம பொதியால் பரபரப்பு - பெண்ணின் சடலம் மீட்பு
கொழும்பு டாம் வீதியில் கைவிடப்பட்ட பொதியொன்றில் சடலமொன்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறு குழந்தை அல்லது பெண்ணொருவரின் சடலமொன்றே, இவ்வாறு பொதியொன்றிற்குள் காணப்படுவதாக அறிய முடிகின்றது
. தற்போது குறித்த பகுதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 2.30 மணியவில் நீண்ட நேரமாக கறுப்பு நிற பொதி ஒன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய சம்பவ இடத்திற்கு பொலிஸார் அனுப்பி வைக்கப்பட்டதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அந்த பொதிக்குள் சடலம் ஒன்று இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆராய்ந்த போது அது பெண் ஒருவரின் சடலமாகும். எனினும் பெண் தொடர்பான தகவல்கள் இன்னமும் மர்மமாக உள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.



