யாழில் பெண்ணொருவர் அடித்துக் கொலை (video)
யாழ்ப்பாணம் - அத்தியடி பகுதியில் பெண்ணொருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று (13.02.2023) பதிவாகியுள்ளது.
அத்தியடி பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் கலாநிதி (வயது 52) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம்
இந்த சம்பவம் தொடர்பில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகள் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கும் போது,
எமது வீட்டுக்கு, வீட்டு வேலைகளை செய்வதற்கும், ஆடுகளுக்கு குழைகள் வெட்ட நேற்றைய தினம் ஒருவர் வந்திருந்தார்.
நான் வீட்டுக்குள் இருந்தேன். அம்மா அவருடன் கதைத்துக் கொண்டு இருந்தார்.
பிறகு இருவருக்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அம்மா சத்தமாக கத்தினார்.
சட்ட நடவடிக்கை
சத்தம் கேட்டு வீட்டிற்குள் இருந்து வெளியே வந்த போது, அம்மா இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் குறித்த நபரை காணவில்லை என வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
மரக்கட்டை ஒன்றினால் தாக்கியே பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாவும், சந்தேகநபர் தொடர்பிலான தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் சந்தேகநபரை கைது செய்வதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
