பெண்ணின் மோசமான செயல்:பொலிஸில் முறைப்பாடு செய்த தலைமை பிக்கு
மொறட்டுவை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வரும் 15 வயதான இளம் பௌத்த பிக்குவை ஏமாற்றி தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியதாக கூறப்படும் 51 வயதான பெண்ணொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விகாரைக்கு அருகில் அமைந்துள்ள வீட்டில் வசித்து வரும் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக மொறட்டுவை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடுமையாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் இளம் பிக்கு சம்பவம், தொடர்பாக விகாரையின் தலைமை பிக்குவுக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, அவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாடு தொடர்பாக விசாரணைகளை நடத்திய பொலிஸார் பெண்ணை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரான பெண், இரண்டு சந்தர்ப்பங்களில் இளம் பௌத்த பிக்குவை வீட்டுக்கு அழைத்துச் சென்று கடுமையாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நடிகர் அபிநய் உடன் 4 நாட்கள் ஒரே வீட்டில் இருந்த நடிகை.. தினமும் குடிப்பது பற்றி அவர் சொன்ன காரணம் Cineulagam
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam