போக்குவரத்து குற்றத்திற்காக பதவிகளை இழந்த ஜப்பான் பெண் அரசியல்வாதி
ஜப்பானின் டோக்கியோ பெருநகர அவை உறுப்பினரான Fumiko Kinoshita என்பவர் தான் வகித்து வந்த அனைத்து பதவிகளையும் இழந்துள்ளார். அவர் செய்த குற்றம் காரணமாக அவருக்கு இந்த நிலைமை ஏற்படடுள்ளது.
Fumiko Kinoshita அண்மையில் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனத்தை ஓட்டி, விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனத்தை ஓட்டி, விபத்து ஏற்படுத்திய குற்றத்திற்காக அவருக்கு போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
செய்த தவறுக்காக மக்களுக்கு முன்னால் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் மற்றும் அனைத்து பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்பதே அந்த தண்டனையாகும்.
இதனடிப்படையில் Fumiko Kinoshita தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதுடன் நேற்று செய்தியாளர் சந்திப்பை நடத்தி மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.
Fumiko Kinoshita டோக்கியோ பெருநகர அவையின் உறுப்பினராக பதவி வகித்து வந்தார். கடந்த ஜூலை மாதம் தேர்தல் பிரசாரம் நடைபெற்ற காலத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.