நாயை கொலை செய்த உயர் நீதிமன்ற பெண் சட்டத்தரணி கைது

Sri Lanka
By Renuka Apr 25, 2023 11:25 AM GMT
Report

சட்டத்தரணியின் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் ஒன்றுக்கு விஷம் வைத்து கொலை செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் உயர் நீதிமன்றின் பெண் சட்டத்தரணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இன்றைய தினம் (25) கைது செய்யப்பட்ட சட்டத்தரணி மத்தேகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என கஹதுடுவ (Kahathuduwa) பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த 12 ஆம் திகதி கிரிவத்துடுவ - தலகலவத்த பிரதேசத்தில் உள்ள மனுதாரரான சட்டத்தரணியின் வீட்டைச் சுற்றிப் பல இடங்களில் சந்தேகத்திற்கிடமான வகையில் சிறிய அளவிலான சில பொதிகள் கிடந்துள்ளன.

நாயை கொலை செய்த உயர் நீதிமன்ற பெண் சட்டத்தரணி கைது | Woman Lawyer Who Poisoned Dog And Killed

சிசிரிவி சாட்சியங்கள்

அதனைக் கண்ட பணிப்பெண் சட்டத்தரணிக்கு அறிவித்ததையடுத்து, திடீரென வீட்டில் இருந்து நாய் ஓடிவந்து தரையில் மயங்கி விழுந்துள்ளது.

இதனையடுத்து. கால்நடை மருத்துவரை வரவழைத்து நாயைப் பரிசோதித்தபோது, ​குறித்த ​நாய் ஒருவகை விஷத்தை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளது என உறுதிப்படுத்தப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த 12ஆம் திகதி வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, ​​வீட்டின் முன்புறம் உள்ள பிரதான வாயில் அருகே சிவப்பு நிற வாகனத்தில் வந்திறங்கிய ஒருவர் தோட்டத்துக்குள் சில பொருட்களை வீசுவது தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, கஹதுடுவ பொலிஸாருக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் பேரில், சிசிடிவி சாட்சியங்களைக் கொண்டு விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாயை கொலை செய்த உயர் நீதிமன்ற பெண் சட்டத்தரணி கைது | Woman Lawyer Who Poisoned Dog And Killed

வாக்குமூலம் பதிவு 

இதன்போது, குறித்த வாகனம் உயர்நீதிமன்றத்தில் கடமையாற்றும் பெண் சட்டத்தரணி ஒருவருக்குச் சொந்தமானது எனத் தகவல் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி, சந்தேகநபரான சட்டத்தரணியை இன்றைய தினம் (25.04.2023) பொலிஸ் நிலையத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, பொலிஸ் நிலையத்துக்கு வருகைதந்தது அவரிடம், ​​வாக்குமூலம் பதிவு செய்த பொலிஸார் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, ஐந்து வருடங்களுக்கு முன்னர் முறைப்பாட்டாளரான சட்டத்தரணியைக் கொலை செய்யும் நோக்கில் நான்கு பேர் அவரது வீட்டிற்கு வந்து வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

மனுதாரரான சட்டத்தரணி மறைந்த பிரபல உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரின் மகன் எனத் தெரியவந்துள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US