திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் பெண் ஒருவர் உயிரிழப்பு
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு இன்று நெஞ்சு வலியென சிகிச்சைக்காக சென்ற வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இடைக்கட்டு வள்ளிபுனம் பகுதியினை சேர்ந்த கணேஸ் விஜயா எனும் 52 அகவையுடைய வயோதிப பெண் ஒருவர் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இதன்போது, குறித்த வயோதிப பெண்ணுக்கு முதற்கட்டமாக சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதற்கமைய,உயிரிழந்தவரின் சடலம் புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பி.சி.ஆர் பரிசோதனை மற்றும் பிரேத பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மரண விசாரணைகளின் பின்னர் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.