ஹட்டனில் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி பெண்ணொருவர் பலி
ஹட்டன் - ஆரியகம பகுதியில் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீட்டிலிருந்தவர்கள் பொருட்கள் கொள்வனவிற்காக நகருக்கு சென்றிருந்த போது நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் திடீரென தீ அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது வீட்டினுள் சுகயீனமுற்ற நிலையில் இருந்த 74 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான ஒய்வுபெற்ற ஆசிரியை டேனிஸ் சமுவேல் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
தீ பரவல் பிரதேசவாசிகளினால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட போதிலும் தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஹட்டன் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


