கொழும்பில் பத்தாயிரம் ரூபாவுக்காக நடந்த பயங்கரம்
கொழும்பின் புறநகர் பகுதியில் வயதான பெண்மணி ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹோமாகம பகுதியில் பத்தாயிரம் ரூபா பணம் வழங்க மறுத்த 80 வயதான பெண்மணி மூச்சு திணறடித்து கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சந்தேக நபர் ஆனமடுவ பகுதியிலுள்ள அவரின் வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
விளக்க மறியல்
சந்தேக நபரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர் கொலையுண்ட பெண்ணின் மகளின் கணவருக்கு சொந்தமான கட்டிடப் பொருட்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண்ணிடமிருந்து பறிமுதல் செய்த நகைகளை கொழும்பு, செட்டித்தெருவில் விற்பனை செய்தமை சிசிரிவி காணொளிகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன.
பெண் படுகொலை
சந்தேகநபர் விடுமுறையில் செல்வதற்காக கொட்டாவ பகுதியிலுள்ள வீடொன்றிலுள்ள பெண்ணிடம் பணம் கேட்டுள்ளார். எனினும் அவர் பணம் வழங்க மறுத்துள்ளமையால் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து வயதான பெண்ணை தரையில் வீழ்த்தி அவரின் கழுத்தை காலால் மிதித்துள்ளதாகவும், பெண் அணிந்திருந்த காதணிகளை கழற்றி சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri

அரக்கனை கொன்று விட்டேன் - முன்னாள் டிஜிபியை கொலை செய்து விட்டு மனைவி பகீர் வாக்குமூலம் News Lankasri
