சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளார்
யாழ்ப்பாணம் தொண்டைமானாறு கடல் நீர் ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ராஜலிங்கம் சுபாஷினி (வயது 40) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளை அடையாளம் கண்ட நிலையில்
குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளதோடு, நேற்று(12) காலை செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் இரவாகியும் வீடு திரும்பவில்லை என அவரது தந்தை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நே்ற்றையதினம் தொண்டைமானாறு ஆலய கடல் நீர் ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட பெண் தொடர்பில் புகைப்படங்கள் செய்திகளில் வெளி வந்திருந்தன.
அவரது தந்தையார் தனது மகளை அடையாளம் கண்ட நிலையில் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியதோடு, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மீட்கப்பட்ட சடலத்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 6 மணி நேரம் முன்

மளிகைப்பொருட்கள்: கனடாவுக்கும் இந்தியாவுக்கும் என்ன விலை வித்தியாசம்? ஒரு வைரல் வீடியோ News Lankasri
