சம்மாந்துறையில் தவறான முடிவெடுத்து பெண்ணொருவர் உயிரிழப்பு !
அம்பாறை- சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலையடிக்கிராமம் 02 ஆம் பகுதியில் பெண்ணொருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
35 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில், அவர் கடந்த 20 வருடங்களாக மனநலப் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தவர் எனத் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் சம்பவ இடத்துக்குச் சென்று மரண விசாரணைகளை முன்னெடுத்தார்.
மேலும், சம்பவ இடத்திற்கு அம்பாறை குற்றதடயவியல் பிரிவு பொலிஸாரும் வருகைதந்து விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதனையடுத்து, உயிரிழந்த பெண்ணின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.